பேரிடர் நிதி தருவதில் பாரபட்சம் காட்டுகிறதா மத்திய அரசு? உண்மை என்ன?

Update: 2023-12-09 17:12 GMT

தற்போது சென்னையை உலுக்கிய புயலால் சென்னை பெரும் இழப்பை சந்தித்தது என்பதில் சந்தேகம் இல்லை அதேசமயம் இதை சமாளிக்க மாநில அரசுக்கு உதவியாக மத்திய அரசு நிதியுதவியை இப்போது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை மத்திய உள்துறை அமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்று செய்துள்ளார், அதில் அவர் பாரதப் பிரதமர் சென்னைக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் சென்னை ஒருங்கிணைந்த நகர்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ 561.29 கோடியை ஒதுக்க உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டார். இப்படி ஒரு அறிவிப்பு இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 2வது தவணைகளாக மத்திய அரசு கொடுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியில், இந்தாண்டு தமிழகத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.900 கோடியில் முதல் தவணையாக ரூ.450 கோடியை இந்தாண்டு ஜூன்-ஜூலை காலத்தில் விடுவித்தது மீதமுள்ள ரூ.450 கோடியையும் தமிழகத்திற்கு விடுக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.


இந்த அறிவிப்பு வரும் முன் திமுக அரசு மத்திய அரசிடம் சுமார் ரூ 5,000 கோடியை விடுவிக்குமாறு கேட்டது. அதன் பின் கடந்த 7ஆம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் சென்னை வெள்ள சேதங்களை பார்வையிட வந்தார். அவரிடம் அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அக்கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கினார். மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியதாவது விரைவில் மத்திய அரசின் குழு வந்து வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட வரும் என்று கூறினார். அதன் பின்னர் திமுக மற்றும் அதன் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளின் 2ஆம் கட்டத் தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்புடைய நபர்கள் மத்திய அரசின் செயலை விமர்சித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டுள்ளது என்று அவர்கள் விமர்சித்தனர்.


இதன் விரிவாக பார்த்தால் உண்மை வெளிவரும், பாஜக அரசு அமைந்ததில் இருந்து தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியாகட்டும், மாநில பேரிடர் நிவாரண நிதியாகட்டும் இரண்டும் வருடா வருடம் ஒதுக்கும் நிதி அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க வேண்டியது, பேரிடர் காலத்தில் விடுவிக்கும் இந்த நிதிகள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளின் மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக சுமார் ரூ 6,478.25 கோடி மற்றும் ரூ 4919.05 கோடி தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்துள்ளது.

இதைத்தவிர புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன் (AMRUT)-கீழ் தமிழகத்திற்கு ரூ.4,397.29 கோடியை விடுவித்துள்ளது மத்திய அரசு. இத்தோடு ரூ 643.2 கோடியை SDMF இன் கீழ் பாஜக அரசு தமிழகத்திற்கு தந்துள்ளது. இதையெல்லாம் மறைத்து எந்த ஆதாரமும் இல்லாமல் பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்று கூறுவது பொய் என்பது நிரூபணமாகியுள்ளது.


தங்களின் இயலாமையை மறைக்கவும், மக்களை திசைதிருப்பவும் திமுக செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று. கடந்த நவம்பர் 4ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் திமுக அமைச்சர் கே. என். நேரு நாங்கள் சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் வேலைகள் 98% முடிவடைந்துவிட்டது என்று கூறிய அவர், இரு தினங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பாஜக கூறுவதுப்போல் ரூ 4,000 கோடி அல்ல, ரூ 5,000 கோடிக்கும் மேல் என்றும் அதில் சுமார் ரூ 2,000 கோடிக்கும் கீழ் தான் செலவிடப்பட்டுள்ளது என்று பல்டி அடித்தார்.

இதில் எது உண்மை? எது பொய்? என்று திமுக அரசு தவிர வேறு யாருக்கும் தெரியாது. மக்கள் விழிப்படைந்து இவர்கள் சொன்ன ரூ.4,000 கோடியையே ஒன்றும் செய்ய முடியவில்லை இன்னும் ரூ.5,000 கோடி மத்திய அரசு ஏன் தரவேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர், அதனால் இப்போது திமுக அரசு விழிப்பிதுங்கி நிற்கிறது.

Tags:    

Similar News