கடலோர கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு எழும் எதிர்ப்பு - பின்னணி என்ன?

Update: 2021-04-09 01:00 GMT

கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் கடலோர கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தும் செய்தி அடிக்கடி வெளியாவதுண்டு. ஆய்வு செய்யச் சென்ற அதிகாரிகளை நுழைய விடவில்லை, படகைப் பிடித்து வைத்துக் கொண்டார்கள், கருவிகளை கைப்பற்றி வைத்துக் கொண்டார்கள் என்ற ரீதியில் இந்த செய்திகள் இருக்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தொடங்கி இனையம், குளச்சல் துறைமுகங்கள் அமைப்பது வரை இந்தக் கதை தொடர்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் போராட்டங்களைத் தாண்டி வெற்றிகரமாக இயங்கி நமக்கு மின்சாரமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற இரண்டு திட்டங்களின் நிலை? 

பல முறை இடங்களை மாற்றி, வேறு பகுதியில் செயல்படுத்த முயன்றும் இந்தத் திட்டங்கள் இன்று வரை அடுத்த நிலையை எட்டவில்லை. ஏன் இடத் தேர்வே இன்னும் முடியவில்லை என்றே நிலையே தொடர்கின்றது. இதற்குக் காரணம் என்ன? இப்படிப்பட்ட போராட்டங்களில் கிறிஸ்தவ பாதிரியார்கள் முன்னிலை வகிப்பதையும், கலந்து கொள்வதையும் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.

இவர்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேள்வியும் உங்களுக்கு எழுந்திருக்கும். அதற்கான பதிலை இப்போது பார்ப்போம். கிறிஸ்தவ தேவாலய நிர்வாகத்தில் பல மட்டங்கள் இருக்கின்றன. அவற்றில் அடிப்படையான அலகுகள் தான் 'அன்பியங்கள்' என்பவை. 1962-65ல் நடந்த இரண்டாவது வாட்டிகன் கூட்டத்தின் முடிவில் சமூகத்துடனான தொடர்பை மேம்படுத்த Basic Christian Communities என்ற அடிப்படை அலகுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது.

இதன்படி முதலில் இத்தாலியிலும், தென் ஆப்பிரிக்காவில் இந்த முறை செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் எங்கெல்லாம் கிறிஸ்தவம் பரவியதோ அங்கெல்லாம் இந்த அலகுகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கத்தோலிக்க திருச்சபையில் உயர் மறைமாவட்டம், மறைமாவட்டம், மறைவட்டம், பங்குதளம்(Parish), மற்றும் அன்பியம் என்ற நிர்வாக மட்டங்கள் உள்ளன.

ஒரு அன்பியத்தில் கிட்டத்தட்ட 40 கிறிஸ்தவ குடும்பங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒரு பங்குதளத்தில் 30 அன்பியங்கள் அமைகின்றன. இவை எவ்வாறு செயல்படுகின்றன அல்லது செயல்படவில்லை என்பது குறித்து மீனவர் ஒருவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்கி என்ற புயல் தமிழகத்தில் கன்னியாகுமரி மற்றும் கேரள மாவட்டங்களை புரட்டிப் போட்ட, பல மீனவர்கள் கடலில் காணாமல் போன சமயத்தில் எழுதப்பட்ட பதிவு இது.


இதில் கடலோர கிராமங்கள் எவ்வாறு 2000ஆவது ஆண்டு வரை உள்ளூர் கமிட்டிகள், பஞ்சாயத்துகள் நிர்வகித்து, பிரச்சினைகளைத் தீர்த்து வந்தன என்றும், அதன் பின்னர் அன்பியங்களின் வருகையால் நிலைமை எவ்வாறு மாறியது என்றும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் தெளிவாக விளக்கியுள்ளார். கடலோர கிராமங்களில் வசிப்பவர்களுக்கு முகவரியை அன்பியங்கள் தானென்றும் அன்பியங்களின் தொடர்பு இல்லாமல் யாரும் அவர்களை அணுக முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஊர் நிர்வாகம் அரசியல் என்று எல்லாவற்றிலும் தலையிடும் அன்பியங்களின் நிர்வாகிகள், அதாவது கத்தோலிக்க திருச்சபை ஆட்கள் தான் தசம பாகம் எனப்படும் வருமானத்தில் 10% தொகையையும் வசூலிப்பவர்கள் என்றும் கூறியிருக்கிறார். தங்களுக்கு தேவையான விஷயங்களுக்காக மக்களை அன்பியங்கள் மூலம் கட்டுப்படுத்தும் கத்தோலிக்கத் திருச்சபை, அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் என்னவென்று கூட கேட்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

கொடுமை என்னவென்றால் இந்த கிராமங்களில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட தரவுகளையும் இந்த அன்பியங்களே பராமரிப்பதால் அவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கின்றனர். எனவே அரசுக்கு எதிரான ஒரு மன நிலையை ஏற்படுத்தி அரசு உதவிகள் எதுவும் நேரடியாக அவர்களை சென்று சேர விடாமல் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன. புயல் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களின் போது அமைச்சர்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிவாரண உதவி வழங்குவதற்காக இந்த கிராமங்களுக்கு சென்றால் பங்குத்தள பாதிரியார் மூலம் மட்டுமே இந்த மக்களை அணுக முடியும்.

பணம், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளையும் இந்தப் பாதிரியார்களிடமே கொடுக்க வேண்டும். இவையெல்லாம் பல செய்தித் தாள்களில் ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகள். இப்போது தெரிகிறதா ஏன் பாதிரியார்கள் போராட்டங்களில் தலைமை ஏற்பதும் கலந்து கொள்வதும் நடக்கிறது என்று? இந்த கிராமங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஏன் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும் இது தெளிவாக்குகிறது.

கிராம மக்களை எப்போதும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கத்தோலிக்க திருச்சபை பின்பற்றும் உத்தி இது. வளர்ச்சி வந்து மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து விட்டாலோ, வெளியுலகை அறிந்து கொண்டு கட்டுப்பட மறுத்தாலோ தங்கள் பிடி தளர்ந்து விடும் என்பது தான் காரணம். கடலோர கிராமங்களில் உள்ள பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் வறுமையால் மதம் மாறியவர்களே.

எனவே அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது மதமாற்றத்திற்கு தடையாக அமையும் என்பதும் மற்றொரு காரணம். மத மாற்றத்துக்காக பல ஆயிரம் கோடிகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறப்படும் அதில் பல முறைகேடுகள் நடப்பதும் தெரிந்த செய்தி தான். இது தான் வளர்ச்சிப் பணிகளுக்கு இவ்வளவு தீவிரமாக கிறிஸ்தவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எதிர்ப்பு கிளம்புவதற்கு பின் இருக்கும் காரணம். இதை கிறிஸ்தவர்களைத் தலையில் வைத்துக் கொண்டாடிய காங்கிரஸ் அரசின் பிரதமரே ஒப்புக் கொண்டது வரலாறு.

Tags:    

Similar News