சுக்கிர தோஷம் விலகி, செல்வ வளம் பெருகி வாழ இந்த கோவிலுக்கு செல்லுங்கள்

Update: 2022-09-09 00:30 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் அமைந்துள்ளது அக்னீஸ்வரர் ஆலயம். கும்பகோணத்திலிருந்து வடகிழக்காக 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் மூலவர் சுக்கிர தேவன் ஆவார். இருப்பினும் முதன்மை தெய்வமாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். சிவபெருமானின் திருவுருவத்தில் அவர் தம் வயிற்று பகுதியில் சுக்கிரன் குடியிருப்பதாக ஐதீகம்.

மத்திய காலத்து சோழர்களால் இந்த திருக்கோவில் கட்டப்பட்டு விஜயநகர பேரரசுகளால் இக்கோவில் புணரமைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து அடுக்கு ராஜகோபுரத்தை உடைய கோவில் இது. இந்த திருத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தளங்களில் ஒன்றாகவும், வைப்புத் தலமாகவும் திகழ்கிறது.

இங்கு அருள் பாலிக்கும் மூலவர் சிவபெருமானுக்கு அக்னீஸ்வரர் என்பதும் அம்பிகைக்கு கற்பகாம்பாள் என்பதும் திருப்பெயராகும். இந்த கோவில் நவகிரக தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இங்கு பிரதான தெய்வம் சுக்கிரன். மற்ற நவகிரக தலங்களை போல இங்கே சுக்கிரனுக்கு தனி வழிபாடு இல்லை. இங்கு சிவபெருமானே சுக்கிரனாகவும் அருள்பாலிப்பது தான் இக்கோவிலின் தனி விஷேசம்.

சுக்கிர தோசம் இருப்பவர்களுக்கு பரிகாரத் தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், இங்கு சிவபெருமானின் மீது அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் லிங்கத்தால் உறிஞ்சப்படுவது தான். அதுமட்டுமின்றி பராசர முனிவருக்கு சிவபெருமான் தன் தாண்ட கோலத்தை காட்டியதால் இங்கிருக்கும் நடராஜ பெருமானுக்கு முக்தி தாண்டவ மூர்த்தி என்பது பெயர்.

தெய்வாம்சத்தின் உச்சமான சிவபெருமானின் திருமண கோலத்தை பிரம்ம தேவருக்கு அருளிய இடம் இது. பஞ்சாட்சர மகிமையை உலகிற்கு உணர்த்திய ஹரதத்த சிவாச்சாரியார் அவதரித்த இத்தலத்தில் தான்.

ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணு பெருமானுக்கு சுக்கிர தோஷம் ஏற்பட்டது. அந்த தோசம் நீங்க விஷ்ணு இங்கிருக்கும் சிவனை வழிபட்டு தோசம் நீங்க பெற்றார் என்பது புராணம். எனவே சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபடுவது மரபு. சுக்கிரதேவன் செல்வ வளங்களை அருள்பவர், எனவே வளமோடு வாழ இங்கே வந்து அக்னீஸ்வரராக இருக்கும் சிவனை வழிபட வேண்டும் என பல ஜோதிடர்கள் சொல்வதுண்டு.

இந்த கோவிலை அக்னிஸ்தலம், பலாசாவனம், பிரம்மபுரி மற்றும் நீலக்குடி என பல பெயர்களில் வழங்குவர். 63 நாயன்மார்களில் ஒருவரான கலிகாம நாயன்மாரின் திருமணம் நடந்தேரிய தலம் இது. 63 நாயன்மார்களில் ஒருவரான மனக்கஞ்சார நாயன்மார் முக்தி பெற்ற தலமும் இதுவே.

Tags:    

Similar News