ஹரனின்(சிவனின்) சாபம் நீக்கிய, ஆச்சர்ய ஶ்ரீ ஹரசாப விமோசன பெருமாள்!

Update: 2021-10-30 00:30 GMT

தமிழகத்தின் புகழ்மிக்க பெருமாள் திருத்தலங்கள் ஏராளமானவை உண்டு. அதில் ஒரு சில புகழின் வெளிச்சம் இல்லாதவையாக இருந்தாலும் அதன் சக்தியும், புராதான அம்சங்களும் பெரு மதிப்பு மிக்கவை. அந்த வரிசையில் முக்கியமான பெருமாள் திருத்தலங்களுள் ஒன்று ஶ்ரீ ஹர சாபவிமோசன பெருமாள் கோவில். பெயரே சொல்வது போல ஹரனின்( சிவனின்) சாபத்தை போக்கிய திருத்தலம் என்பதாலே இக்கோவிலுக்கு ஶ்ரீ ஹர சாப விமோசன பெருமாள் கோவில் என்று பெயர்.

இக்கோவில் தமிழக்த்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு அருகே இருக்கும் திருக்கண்டியூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. இது விஷ்ணு பெருமானின் 108 திவ்யதேசங்களில் ஏழாவது திருத்தலமாகும் . இக்கோவில் திருமங்கையாழ்வார் அவர்களால் மங்களாசனம் செய்யப்பட்டது. அந்த மங்களாசனம் பின்வருமாறு

"பிண்டியார் மண்டையேந்தி பிறர்மனை திரிந்துண்ணும் உண்டியான்
சாபந்தீர்த்த ஒருவனூர் உலகமேத்தும் கண்டியூர ரங்கம் கச்சிபேர் மல்லை
யென்று மண்டினார் குயலல்லால் மற்றையார்க்கு உய்யலாமே "

- திருமங்கையாழ்வார்.

இக்கோவிலின் மூலவராக இருப்பவர் ஹர சாப விமோசனர் மற்றும் தாயாரின் பெயர் கமலவல்லி.

இக்கோவில் குறித்து சொல்லப்படும் தல வரலாறு யாதெனில், சிவ பெருமானுக்கு ஐந்து திருமுகங்கள் உண்டு. அதை போலவே முன்னொரு காலத்தில் பிரம்ம தேவருக்கும் ஐந்து திருமுகங்கள் இருந்ததாகவும், அதன் பொருட்டே தான் சிவனுக்கு நிகரானவர் என்று கர்வம் கொண்டு பிரம்ம தேவர் இருந்தார் என்றும். அதனால் சிவபெருமான் பிரம்ம தேவரின் மத்தியில் இருந்த தலையை கிள்ளி எரிந்தார். அதனால் அவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்க திருக்கண்டியூரில் உள்ள கமல தீர்த்ததில் நீராடி விமோஷனம் பெற்றார்.

சிவனின் தோஷத்தை நீக்கிய தலம் என்பதாலேயே இப்பெயர் நிலைபெற்றது. மேலும் இங்கு வந்து வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் தோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. இங்கு சிவபெருமான், அகத்தியர் ஆகியோர் வந்து நாதனை தரிசித்தற்கான குறிப்புகள் நம் புராணங்களில் உண்டு.

இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தின் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பு பெற்றது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் வழியில், வடக்கு புறத்தில் சுமார் 6 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Image : Pinterest

Tags:    

Similar News