குலதெய்வத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்கள் ஏன்?

குலதெய்வத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்தும் ஏன்? மற்றும் அதற்கான காரணங்கள்.

Update: 2022-03-29 01:53 GMT

ஒருவர் தன்னுடைய அருகில் உள்ள தெய்வங்களை வழிபட மறந்தாலும் குலதெய்வத்தை ஒருபொழுதும் வழிபட மறக்கக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லி வைத்ததுண்டு. காரணம் குலதெய்வத்திற்கு அவ்வளவு மகிமை உண்டாம். நீங்கள் எதை வேண்டி குலதெய்வத்தை வழிபட்டாலும் அது அவ்வாறு நடக்கும்? என்பதும் ஐதீகம். குலத்தைக் காப்பது குலதெய்வ வழிபாடு. மாறிவிட்ட வாழ்க்கை முறை, வழிபாட்டு முறை காரணமாக குல தெய்வத்தை பலரும் மறந்துவிட்டனர். பல தலைமுறைக்கு முன்பு சொந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஒரு ஊரில் குடியேறியதால் குலதெய்வத்தை தொலைத்தவர்கள் பல நண்பர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமல், குல தெய்வம் எது என்று அறிய பலரும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றனர். உங்கள் குல தெய்வத்தை கண்டறிய உதவும் ஸ்லோகம் ஒன்று உள்ளது. இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நம்முடைய குலதெய்வ தரிசனம் நம்முடைய கனவில் கிடைக்கும். அல்லது குலதெய்வம் பற்றிய விவரம் யார் மூலமாகவோ? அறிய வரும். "ஓம் ஹ்ரீம் விசித்திர வீர்யம் ஸ்வப்னே இஷ்ட தர்ஷய நமஹா" இந்த ஸ்லோகத்தை 108 முறை சொன்னால் நிச்சயம் குலதெய்வம் எது என்பதை? நீங்கள் கண்டறிய முடியுமாம். 


நம் குலத்தை தலைமுறை தலைமுறையாக காக்கும் கண் போன்றவர்கள் தான் குலதெய்வங்கள். குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பதால் குல தெய்வ வழிபாடு மிகவும் முக்கியமானது. மாதத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்வது மிக்க பலனை வழங்கும் என்பது முன்னோர் வாக்கு. 

Input & Image courtesy:  Maalaimalar News

Tags:    

Similar News