விமானங்களுக்கு மிரட்டல் விவகாரம் - டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம்

விமானங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் விவகாரம் தொடர்பான தகவல்களை தராத ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-10-24 10:15 GMT

விமானங்களுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல்கள் தொடர்பாக கேட்ட தகவல்களை தராத ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு அதன் நடவடிக்கைகள் குற்றத்திற்கு துணை போவது போல் அமைவதாக கூறியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினமும் சமூக வலைதளங்கள் மூலம் விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருகிறது .இதனை அடுத்து பல விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்படுவதுடன் சில விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்படுகின்றன .

இதனால் விமான நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் எட்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .அப்போது மிரட்டல் வந்த சில twitter வலைதள கணக்குகளை கண்டறிந்தனர் .அந்த கணக்கின் உரிமையாளர் மற்றும் ஐ.பி முகவரி உள்ளிட்ட தகவல்களை தருமாறு அந்த நிறுவனத்திடம் போலீசார் கேட்டனர் .ஆனால் அந்த தகவல்களை தர அந்த நிறுவனம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது .இந்நிலையில் சமூக வலைதள நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய அரசு அதிகாரிகள் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தினர். அப்போது போலீசார் கேட்ட தகவல்களை தராத ட்விட்டர் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் .மேலும் அதன் செயல்பாடுகள் குற்றத்திற்கு துணை போவது போல் அமைந்துள்ளது எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News