இசை வடிவிலான வேத ஒலிகளின் மூலம் நோய்கள் குணமாகும் அதிசயம்! ஆச்சர்ய தகவல்

Update: 2022-11-15 01:00 GMT

சப்தங்களுக்கு மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்பதை நவீன விஞ்ஞான உலகம் நிரூபித்திருக்கிறது. சப்தங்கள் குறிப்பிட்ட அலைவரிசையில் வரும்போது அவை மனிதனுடைய உடலையும் மனதையும் சுகப்படுத்தும் ஆற்றல் கொண்டதாய் மாறும். அந்த சப்த அலைகள் இசை வடிவில் ராகங்களாக கொட்டி கிடக்கின்றன. நம் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 72 முறை இருக்கிறது. . இதே அலைவரிசையில் இருக்கிற ராகங்கள் மனதிற்கு அமைதியை ஏற்படுத்தும், இதை விட குறைந்த அலைவரிசையில் இருக்கிற ராகங்கள் ஆழமான அமைதியையும் ஆழ்மன மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

பண்டைய வேதங்கள் இசை வடிவில் இருக்கின்றன. இவற்றுக்கு ஸ்ருதி என்று பெயர். இந்த வேத மந்திரங்களின் உச்சரிப்பு யாகங்களில் சொல்லப்படும்போது ஆன்மீக ரீதியில் பல அற்புதங்கள் நிகழும். நோய்களை குணமாக்கும் தன்மையும் இந்த வேத மந்திர ஒலிகளுக்கு உண்டு. நான்கு வேதங்களில் ஒன்றான சாம வேதமே இசை மற்றும் சப்தங்களை குறித்து இயற்றப்பட்ட வேதம் தான்.

புரந்தர தாசர் என்கிற இசை வல்லுநர் குறிப்பிட்ட ஒரு ராகத்தை கொண்டு உடலில் இருக்கும் விஷத்தை முறிக்கும் அற்புதத்தை செய்துள்ளார். தியாக ராயர் ராகம் பாடி இறந்தவரை உயிருடன் கொண்டுவந்தாக வரலாறு உள்ளது, முத்துசுவாமி தீட்சதர் குறிப்பிட்ட ராகத்தின் வயிற்று வலியை குணப்படுத்தி இருக்கிறார்.

நம் காலத்தில் சங்கீத வித்துவான் ஓம்கார் நாத் தாகூர் முசோலினியின் தூக்கமின்மையை சரிப்படுத்தினர். கொள்ளேகால் சுப்ரமண்யம் என்னும் சங்கீத வித்வனின் கருத்துப்படி சங்கீத சாஸ்திரத்தில் 72 நாடிகளுக்கான 72 ரகங்களை இருக்கின்றன. இந்த ராகங்களை சரியான லட்சனங்களுடன் சுருதி சுத்தமாகவும் பாடினால் ராக தேவதைகள் நமக்கு அருளை பொழிவார்கள். இவற்றை முறையாக பாடினால் சில அறுவை சிகிச்சைகளை கூட தவிர்க்கலாம்.

உதாரணமாக நீலாம்பரி மற்றும் கல்யாணி ராகங்கள் தூக்கத்தை வரவளிக்குது நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் தன்மை கொண்டது.

Tags:    

Similar News