விஷ்ணு கோவில்களில் கிரீடம் போன்ற சடகோபம் அல்லது சடாரி வைப்பது ஏன்?

Update: 2021-12-25 00:30 GMT

கோவில்களில் தெய்வ வழிபாட்டிற்கு பின் அனைவருக்கும் பிரசாதமாக தீர்த்தம், திருநீறு, பூக்கள் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நாம் கவனித்திருப்போம் பெருமாள் கோவில்களில் துளசி தீர்த்தத்துடன் கிரீட வடிவில் இருக்கும் சடகோபம் வைப்பார்கள். திருமாலின் திருபாதம் பொறித்த இந்த சடகோபத்திற்கு சடாரி என்ற பெயரும் உண்டு.

தென்புறத்து விஷ்ணு கோவில்களில் சடகோபம் வைக்கும் வழக்கம் பெரும்பாலும் உண்டு. இது ஏன் என்கிற கேள்வி பலருக்கும் இருப்பதுண்டு. நம்மாழ்வர் அவர்களுக்கு சடகோபன் என்ற பெயர் இருந்ததுண்டு. காரணம் அவர் இளம் பருவம் வரையில் உடலை அசைக்க முடியாத படி இருந்தார். ஒரு முறை அவரை மதுர கவி ஆழ்வார் சந்தித்து வேதாந்தத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டார், அசைவின்றி இருந்த அவர் மீது சிறு கல்லை வீசினார் அப்போது உணர்வு பெற்று கவி ஆழ்வார் கேட்ட கேள்விக்கு பதிலளித்து விஷ்ணு பெருமானின் மீது ஆயிரம் பாடல்களை பாடினார். அதுவே திருவாய்மொழி என்று அழைப்படுகிறது என்பது வரலாறு.

இவ்வாறு அவர் பாடிய போது மனம் குளிர்ந்த விஷ்ணு பெருமான். என்ன வரம் வேண்டும் என நம்மாழ்வாரை கேட்டபோது, விஷ்ணுவின் திருப்பாதத்தில் தன்னையும் பக்தர்களையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும். என்று வேண்டினார். இதன் பொருட்டே இன்றும் விஷ்ணுவின் திருப்பாதம் பொறித்த சடகோபம் அல்லது சடாரி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பெருமாளின் தாமரை பாதத்தில் ஒருவர் இணைந்திருந்தால் பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. விஷ்ணுவின் திருப்பாத புகழவோ சொல்லவோ வார்த்தைகள் இல்லை. விஷ்ணுவின் திருப்பாத அருளில் தேனின் தித்திப்பு இருக்கிறது என்பது ஆன்மீக அறிஞர்களின் வாய்மொழி.

பாதம் என்பது வெறும் கால் பாதத்தை மட்டும் குறிப்பதல்ல, அது இருப்பை குறிக்கும் சொல். எனவே சடகோபம் கிட்டுவது விஷ்ணு பெருமானின் திருப்பாத அருள் கிடைப்பதை போன்றதாகும். இந்த சடகோபம், வெள்ளி, செம்பு ஆகியவற்றில் உருவாக்கப்படுகிறது. கோவிலின் அர்ச்சகர் வழிபாட்டிற்கு பின் சடகோபத்தை நமக்கு வழங்கும் போது, ஒருவர் மிகுந்த பக்தியுடன் குனிந்து இதை ஏந்திகொள்வது வழக்கம். அனைத்து பாவங்களில் இருந்தும் விடுதலை தரும் சடகோபம் பெறுவது நம் புண்ணியங்களுள் ஒன்றாகும்.

Tags:    

Similar News