பொருளாதார சிக்கல் தீர காமதேனுவை வீட்டில் வழிபடுவது எப்படி?

Update: 2021-12-15 00:30 GMT

இந்து புராணங்களில் மிகவும் புனிதமாக கருதப்படும் உயிரினம் பசு அல்லது காமதேனு. காமதேனு என்பது தேவலோகத்தில் வாழக்கூடிய தெய்வீக பசுவாகும். பாற்கடலை கடைந்த போது காமதேனு தோன்றியதாக சொல்வர். கேட்கும் வரத்தை அருளக்கூடியது காமதேனு என்பது நம்பிக்கை. எனவே வீடுகளில் காமதேனுவின் படத்தை அல்லது திருவுருவச்சிலையை வைப்பது செல்வ செழிப்பை வழங்கும் என்பது ஐதீகம்.

காமதேனுவின் சிலை பெரும்பாலும் சிறிய கன்றுடன் இருப்பதை போன்று இருக்கும். காமதேனுவின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒவ்வொரு ஆன்மீக முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் நான்கு கால்களும் நான்கு வேதங்களை குறிப்பதாகும். அதன் கண்கள் இரண்டும் சூரிய சந்திரனை குறிப்பதாகும். அதன் கொம்புகளும், அதன் நடுவில் இருக்கும் சிறிய மேடு போன்ற அமைப்பும் மும்மூர்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவனை குறிப்பதாகும். அக்னி, வாயு ஆகியவை அதன் தோள்களில் குடு கொண்டுள்ளன.

காமதேனுவிற்கு மற்றொரு பெயரும் உண்டு. சுரபி என்பதே அது. சுரபி என்றால் நறுமணம் என்ற பொருளும் உண்டு. வெற்றி மற்றும் வளம் வேண்டி ஒருவர் காமதேனுவிற்கு வழிபாடுகள் செய்வார்கள், மேலும் காமதேனு புனிதத்தின் அம்சமாகும்.

மனதில் சிறிய தோய்வு நேர்ந்தால், மன ரீதியான புத்துணர்வை பெறுவதற்கு காமதேனுவின் திருவுருவத்தை பூஜையறையில் வைத்து வெள்ளி தோரும் பூஜை செய்து வரலாம். வணிகத்தில் தொடர் செலவுகள் நேர்ந்தால் அதற்கான பரிகாரமாக காமதேனுவின் திருவுருவத்தை வணிகம் நடைபெறும் இடத்தின் கன்னி மூலையில் ஆதாவது தென்மேற்கு மூலையில் வைத்து வழிபட பொருளாதார சிக்கல் குறையும்.

மேலும் வடக்கில் காமதேனுவை வைத்து திங்கள் தோறும் பூஜித்து வர வீட்டிலுள்ள சங்கடங்கள் மற்றும் பொருளாதார குறைகள் தீரும். அதுமட்டுமின்றி காமதேனுவை அதன் கன்றான நந்தினியுடன் வணங்குபவருக்கு முன்று தேவியரின் அருளும் கிடைக்கும். பார்வதி, சரஸ்வதி மற்றும் இலட்சுமி தேவி மூவரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். அன்பு, அமைதி, ஆனந்தம் ஆகிய அனைத்தையும் அருளுபவளாக காமதேனு திகழ்கிறாள். தொழில் வெற்றி, பொருளாதார வெற்றி, காரிய வெற்றி மற்றும் ஆன்மீக வெற்றி என சகலவிதமான விஜயத்தையும் அருளும் தன்மை காமதேனுவிற்கு உண்டு.

வாஸ்து முறை, மற்றும் சரியான பூஜை முறையை பின்பற்றி காமதேனுவை வழிபட்டு வந்தால் சகல விதமான சங்கடங்களும் தீரும்.

Image : Amazon.in

நன்றி: மேஜிக்ப்ரிக்ஸ்

Tags:    

Similar News