கொல்கத்தாவின் இளவரசன் என்று கொண்டாடப்படும் நபர் கங்குலி அவர்கள்தான். நேற்றைய தினம் கங்குலியின் 51வது பிறந்தநாள் விழாவில் சிறப்பாக கொண்டாட்டங்கள் நடைபெற்றது. கிரிக்கெட்டில் இருந்து 2008ஆம் ஆண்டே ஓய்வை அறிவித்தாலும், அவரின் பொருளாதார வளர்ச்சியில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை. குறிப்பாக எப்பொழுதும் தன்னை பிசியாக இருக்கும் நபராக வைத்துக் கொள்ளும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தொடர்ந்து அவரின் சொத்து மதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கொல்கத்தா நகரத்தில் செட்டில் ஆயிருக்கும் கங்குலி குடும்பம் தான் அங்கு இருக்கும் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கொல்கத்தாவில் வசித்து வரும் கங்குலி, ரூ.7 கோடி மதிப்பில் சொந்த வீடு கட்டியுள்ளார். அதேபோல் லண்டன் நகரத்தில் இரு அறைகளை கொண்ட வீடு ஒன்று கங்குலிக்கு சொந்தமாக உள்ளது. இந்திய கிரிக்கெட்டில் அனைவருக்கும் பிடித்த ஒரு வீரராக கங்குலி திகழ்ந்து வருகிறார்.
அதேபோல் ஓய்வுக்கு பின்னரும் சர்வதேச அளவில் 11 நிறுவனங்களின் விளம்பர தூதராக சவுரவ் கங்குலி செயல்பட்டு வருகிறார். கங்குலி கேப்டன்சி கீழ் உருவாக்கப்பட்ட வீரர்கள் தான் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்தியாவுக்கு வென்று கொடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் BCCI தலைவராகவும் கங்குலி ஏராளமான பணிகளை செய்து இருக்கிறார்.
Input & Image courtesy: News