சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி போட்டி: ரசிகர்கள் ஆர்வம்!
சென்னையில் சர்வதேச ஒரு நாள் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம்.
சென்னையில் வருகின்ற 22ஆம் தேதி நடைபெறும் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கான மும்முரமான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைனில் விற்பனை வருகின்ற 13-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் தற்பொழுது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இரண்டாவது ஒருநாள் போட்டி மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி என்று மூன்று போட்டிகள் நடத்தப்பட்ட இருக்கிறது.
இதில் முதலாவது போட்டி மும்பையிலும் இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் மூன்றாவது போட்டி சென்னையில் நடைபெற இருக்கிறது. சென்னையில் நடைபெறும் போட்டிக்கான தற்போது ஆன்லைன் டிக்கெட் விற்பனை 13-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆன்லைன் விற்பனை பேடிஎம் மற்றும் www.insider.in இன் ஆகிய இணையதளங்களில் மூலமாக கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிக்கான டிக்கெட் குறைந்த விலை பட்சமாக 1200 ஆகவும், அதிக விலை சொகுசு பாஸ் என்று அழைக்கப்படும் டிக்கெட் விற்பனை பத்தாயிரம் ஆகும் என விலை நிர்ணயம் செய்யப் பட்டிருக்கிறது.
சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள கவுண்டர்களில் நேரடி டிக்கெட் விற்பனை வருகின்ற 18ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. விளையாட்டுப் போட்டிகளைக் காண வரும் ரசிகர்களுக்கு வழக்கம் போல் பல்வேறு கட்டுப்பாடுகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. உணவு, குளிர்பானம், பிளாஸ்டிக் பைகள், சிகரெட் போன்ற பொருட்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது. சென்னையில் சர்வதேச ஒரு நாள் போட்டி டிசம்பர் மாதத்திற்கு பிறகு 2019 க்கு பிறகு நடக்கும் முதல் போட்டி இதுவாகும்.
Input & image courtesy: Thanthi News