செஸ் ஒலிம்பியாட் வெற்றியை குவிக்க தொடங்கிய இந்திய வீரர், வீராங்கனைகள்!

Update: 2022-07-30 03:12 GMT

சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள 'போர் பாயிண்ட்ஸ்'' ரிசார்ட் பிரமாண்ட 5 நட்சத்திர தகுதி பெற்ற அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று (ஜூலை 29) மாலை 3 மணி முதல் தொடங்கியது. இதில் 3 வெவ்வேறு அணிகள் பங்கேற்றன.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரின் ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்கு விளையாடிய ரோனக் சத்வானி வெற்றி பெற்றார். இந்தியாவின் ரோனக் சத்வானி 36 நகரத்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை சாய்த்தார். இவரது வெற்றியைத் தொடர்ந்து இந்திய பி மகளிர் அணி வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய சி பிரிவு வீராங்கனைகள் ஈஷா கர்வாடே, பிரதியுஷா உள்ளிட்டோரும் வெற்றியடைந்தனர்.

மேலும் ஓபன் சி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய வீரர்களான கார்த்திகேயன் முரளி, அபிஜித் குப்தா உள்ளிட்டோரும் வெற்றியடைந்தனர். அதே போன்று தமிழக இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷூம் வெற்றி பெற்றார். மேலும், இந்திய பி பிரிவு மகளிர் அணியில் இடம் பிடித்துள்ள கோம்ஸ் மேரி ஆன், திவ்யாச தேஷ்முக் உள்ளிட்டோரும் வெற்றி பெற்று அசத்தியுள்ளனர். போட்டி தொடங்கிய முதல் நாளே இந்திய வீரர், வீராங்கனைகள் வெற்றி பெற்று அசத்தி வருவது இந்திய மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy: Twitter

Tags:    

Similar News