புத்தாண்டின் போது கட்டுப்பாடுகளை மீறினால் கைது! டி.ஜி.பி. சைலேந்திரபாபு எச்சரிக்கை!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று குறைந்திருந்தாலும், தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மீண்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்கள் விதித்து வருகிறது.
இதனிடையே புத்தாண்டு ஒரு சில நாட்களில் வர இருப்பதால், அதனை வரவேற்கும் விதமாக நகரப்பகுதிகளில் இளைஞர்கள் ஒன்று கூடி கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை ஒமைக்ரான் அச்சுறுத்தல் இருப்பதால் பல மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களின் வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாட வேண்டும். அதே சமயம் புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவது மட்டுமின்றி அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar