ஆதீன மட சொத்துகளில் ஆக்கிரமிப்பு!! உயர் நீதிமன்றம் உத்தரவு!!

Update: 2026-02-26 12:35 GMT

தமிழகம் முழுவதும் உள்ள ஆதீன மடங்களுக்குச் சொந்தமான சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர் அறக்கட்டளை அறங்காவலரான ஏ.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி மாவட்டம் நெடுங்குன்றத்தில் உள்ள செங்கோல் ஆதீன மடத்துக்குச் சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் உள்ள அனைத்து ஆதீன மடங்களுக்கும் சொந்தமான சொத்துகளின் நிலை குறித்து அறிய அனைத்து ஆதீன மடங்களையும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டது.


பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Tags:    

Similar News