இஸ்லாமிய மத அடையாளத்துடன் கோயிலில் பிரசாதம் விற்பனை: கோயில் ஆணையர் விளக்கம்!
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் இஸ்லாம் மத அடையாளத்துடன் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் இஸ்லாம் மத அடையாளத்துடன் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த இந்துக்கள் மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பவானி சங்கமேஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமாக வருவது வழக்கம். கோயிலுக்கு வருபவர்கள் பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம். இதனிடையே பிரசாதக் கடையில் முறுக்குப் பொட்டலம் விற்பனை செய்யப்பட்டது. அதில் இஸ்லாம் மத அடையாளத்துடன் இருந்தது. இதனை பார்த்த இந்துக்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவம் இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினருக்கு தகவல் தெரிய வந்தது. இதன் பின்னர் கோயிலுக்கு முன்னர் கடந்த சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். எப்படி இந்துக் கோயிலில் பிற மத அடையாளத்துடன் பிரசாதம் விநியோகம் செய்யலாம் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில், கோயில் உதவி ஆணையர் சபர்மதி விசாரணை நடத்தியுள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இதனால் பிரசாதம் வெளியில் இருந்து வாங்கி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது பற்றி பிரசாதம் விற்பனை செய்யும் கடை நடத்துபவர்களுக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார். இதன் பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.
Souce: Dinamani
Image Courtesy: RVA Temples