சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்தியது உண்மையா? தீட்சிதர் பரபரப்பு தகவல்!
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பெண் பக்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி உண்மையில்லை என தீட்சிதர் ஒருவர் பரபரப்பான தகவலை கூறியுள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்றுக்கு பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் பக்தர் ஒருவர் கோவிலுக்கு வந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது. அது உண்மையில்லை எனவும் அது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக ராதாகிருஷ்ணன் என்ற தீட்சிர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தி, கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஒரு பெண்மணியை அனைவரும் சேர்ந்து தாக்கியதாக அவதூறு செய்தி மீடியாக்களில் பரவி வருகிறது. அந்த செய்தியை ஒருபுறமாக எடுத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் மறுபுறம் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை யாரும் தெரிவிக்கவில்லை. கடந்த வருடம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு தரிசிக்க வந்த பெண்மணியை ஒரு தீட்சிதர் தாக்கியதாக வீடியோ வெளியானது. அதற்காக கோவில் பெயர் மீது அவதூறு ஏற்பட்டது. அதனை கண்டிக்கும் வகையில் நாங்கள் கோவிலில் இருந்து தொலைக்காட்சிகளுக்கு பிரஸ் மீட் கொடுத்தோம்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருக்கோயிலுக்கு வந்த பெண்பக்தரை அறைந்து, நகை பறிக்க முயன்ற தீட்சிதர்தான் நேற்று சிதம்பரம் கோயிலில் நடந்த பிரச்சனைக்கு காரணம்!
— Indu Makkal Katchi (Offl) 🇮🇳 (@Indumakalktchi) February 16, 2022
முழுவிபரம் இணைப்பில் காண்கhttps://t.co/10xqc97ocI https://t.co/kcICR2mV9v
மேலும், தவறு செய்த அந்த தீட்சிதரை தண்டிக்கின்ற வகையில் இரண்டு மாத காலங்கள் அபராதம் விதித்து, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டோம். இதனிடையே சஸ்பெண்ட் காலம் முடிந்து அவர் மீண்டும் கோவிலுக்கு வந்துவிட்டார். மீண்டும் பழைய காழ்ப்புணர்ச்சி காரணமாக கோவில் மேலே ஏறமுயற்சித்தார். மேலும், கோவிலுடைய சட்டம் கொரோனா காரணமாக அனைத்து கோவில்களிலும் மக்கள் நின்று தரிசனம் செய்ய முடியாத வண்ணம் தொடர்ந்து சென்று கொண்டிருக்குமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனை தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களிலும் ஏற்படுத்தப்பட்டது.