கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திடீர் மூடல்!

Update: 2022-02-18 05:57 GMT

கீழடியில் செயல்பட்டு வரும் திறந்தவெளி அருங்காட்சியகம் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் ஏழாம் கட்ட அகழாய்வு முடிந்த பின்னர் கீழடியில் மட்டும் அகழாய்வு நடைபெற்ற இடங்கள் திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இதனை காண்பதற்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் ஆவலுடன் சென்று பார்வையிட்டு வந்தனர்.

இந்நிலையில், இரண்டு மாதங்களாக இயங்கி வந்த திறந்தவெளி அருங்காட்சியகத்தை தற்போது தமிழக தொல்லியல் துறை தார்ப்பாய் போர்த்தி மூடி வைத்துள்ளது. இதனால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை உருவாகியுள்ளது. உடனடியாக பொதுமக்கள் பார்வையிடுவதற்கு மீண்டும் திறந்துவிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News