தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக உள்ள 31 ஆயிரத்து 670 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லைக்கல் ஊன்றப்பட்டு, கம்பிவேலை அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வருகின்றனர். இது போன்ற குற்றங்களை தடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு பலர் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து கோயில் நிலங்களை கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடம் இருந்து நிலங்களை பாதுகாத்து அதில் இருந்து கோயிலுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நவீன ரோவர் உபகரணங்களை உபயோகித்து அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தமிழக அரசின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source: Polimer
Image Courtesy: Indian Eagle