டயர் கடைக்காக மூடப்பட்ட கோயிலை மீண்டும் புனரமைக்க இந்து முன்னணி வலியுறுத்தல்!
காஞ்சிபுரத்தில் வாகனத்திற்கு உபயோகப்படுத்தும் டயர் கடை நடத்துவதற்காக மறைக்கப்பட்டிருந்த கோயிலை இந்து முன்னணியால் வெளிச்சத்துக்கு வந்தது.
காஞ்சிபுரம் - இந்து கோவிலை ஆக்கிரமித்து வாகன டயர் கடை நடத்தி வந்துள்ளனர்.
— Hindu Munnani (@hindumunnaniorg) April 12, 2022
தற்போது இந்த கோவில் வருவாய்த் துறையால் மூடப்படுள்ளது.
தமிழக அரசு கோவிலை புனரமைத்து மக்கள் வழிபாட்டிற்கு வர செய்ய வேண்டும் என்று இந்துமுன்னணி வலியுறுத்தல்.#இந்துமுன்னணி #காஞ்சிபுரம் #கோவில்கள் #savetemples pic.twitter.com/7VknKFMyzU
காஞ்சிபுரம் நகர்பகுதியில் கோயில் ஒன்று இருக்கிறது. அது நீண்ட நாட்களாக மக்கள் பயன்படுத்த முடியாமல் டயர் கடை வைத்து கோயிலுக்கு செல்லும் முகப்பு பக்கங்கள் மறைக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி கோயில் உள்ளேயும் பழைய டயர்கள் கொட்டி வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்வையிட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக டயர் கடையை அகற்றி பழைய மாதிரி கோயிலை புனரமைத்து கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Twiter