அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்: இளையராஜா பேச்சால் இடதுசாரிகள் அதிர்ச்சி!

Update: 2022-04-16 02:15 GMT
அம்பேத்கரின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்: இளையராஜா பேச்சால் இடதுசாரிகள் அதிர்ச்சி!

அம்பேத்கரின் ஒவ்வொரு செயல் திட்டத்தையும் பிரதமர் மோடி நிறைவேற்றி வருவதாக இசையமைப்பாளர் இளையராஜா புகழ்துள்ளார். இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். புளூ கிராப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்கின்ற நிறுவனத்தின் 'அம்பேத்கரும் மோடியும்' சீர்த்திருத்தவாதிகளின் சிந்தனையும், செயல் வீரர்களின் நடவடிக்கையும் என்கின்ற நூலுக்கு இளையராஜா அணிந்துரை எழுதியுள்ளார்.

அவர் அதில் கூறியுள்ள கருத்துகள்: அம்பேத்கரை தெரிந்திருந்தால் மட்டும் போதாது. அவரது உண்மையான மதிப்பினை உணர்ந்து அவரின் சிந்தனைகளை செயல்படுத்தி வருபவரை ஊக்குவிக்க வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அனைத்து துறைகளும் முன்னேற்றம் அடைந்துள்ளது. குறிப்பாக அம்பேத்கரின் சிந்தனைகள் எந்த அளவுக்கு உதவியிருக்கிறது என்பதனை இந்த நூல் ஆய்வு மேற்கொள்கிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பெண்களின் திருமண வயது உயர்வு, இலவசமாக காஸ் இணைப்பு, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, முத்தலாக் சட்டம் என்று பெண்களுக்காக கொண்டு வந்த திட்டங்களால் அவர்கள் மாற்றத்தை கண்டுள்ளனர். இந்த மாற்றங்களை கண்டு அம்பேத்கரே மிகவும் பெருமைப்படுவார். அம்பேத்கரும், பிரதமர் மோடியும் ஒன்று. இவ்வவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தை கேட்டவுடன் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இசைஞானி பிரதமர் மோடியை புகழ்ந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy: Times Of India

Tags:    

Similar News