மதமாற்றம் செய்யக்கூடாது.. மதுரையில் கிறிஸ்துவ அமைப்பினருடன் இந்து முன்னணி வாக்குவாதம்!

Update: 2022-05-24 05:38 GMT

மதுரை அருகே கட்டாய மதமாற்றம் செய்வதாக கிறிஸ்துவ அமைப்புடன் இந்து முன்னணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிகுட்பட்ட கள்ளிக்குடி மற்றும் அதனை சுற்று வட்டார கிராமங்களிலும் கிறிஸ்துவ அமைப்பினர் மதபிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் மூலம் பிரச்சாரத்திலும் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இது குறித்து விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி பகுதியை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் வந்த இந்து முன்னணியினர் கட்டாய மதமாற்றம் செய்வதாகக்கூறி கிறிஸ்துவ அமைப்பினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணியினர் எதிர்ப்பை தொடர்ந்து கிறிஸ்துவ அமைப்பினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதையடுத்து கள்ளிக்குடி காவல்நிலையத்தில் இந்து முன்னணி புகார் மனு அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதமாற்றம் செய்த சம்பவம் கள்ளிக்குடி பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது.

Source: One India Tamil

Image Courtesy:Asianews

Tags:    

Similar News