விருட்டென காரிலிருந்து இறங்கி கையசைத்த மோடி, அதிர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் - ஆன்மீக மண்ணில் மோடியின் உற்சாகம்

Update: 2022-05-26 12:32 GMT

ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி வரவேற்றனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தலைமைச்செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் பிரதமரை வரவேற்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.வாசன், மேயர் பிரியா வரவேற்றனர்.

நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு சாலை மார்க்கமாக சென்று கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க தொண்டர்களும், பொது மக்களும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கலை நிகழ்ச்சிகளை காரில் இருந்தபடி ரசித்த பிரதமர், ஒருகட்டத்தில் கீழே இறங்கி அனைவரையும் பார்த்து கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Similar News