இரண்டு கோடி ரூபாயில் ஒரு ரூபாய் குறைந்தாலும் கொடுக்க மாட்டேன் - பஞ்சலோக சுவாமி சிலைக்கு விலை பேசிய வாலிபர்!
மயிலாடுதுறையில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டது. அதனை வைத்திருந்த மவாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே, டி.மணல்மேடு என்ற கிராமத்தில், 2 பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போலீசார் சிலை வாங்கும் புரோக்கர்கள் போல நடித்து, ரகசிய விசாரணை நடத்தினர். என்னிடம் புத்த மத பெண் கடவுள், விநாயகர் என, இரண்டு பஞ்சலோக சிலைகள் உள்ளன. இவற்றின் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய். இதை விட ஒரு ரூபாய் குறைந்தாலும், சிலைகளை விற்க மாட்டேன். வெளிநாடுகளுக்கு கடத்த முயன்று வருகிறேன் என போலீசாரிடமே கூறியுள்ளார்.
அவரை கைது செய்த போலீசார் சிலைகளை பறிமுதல் செய்தனர். அந்த நபரின் பெயர் சுரேஷ் என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்டதில், தாராதேவி சிலை 700 ஆண்டுகள் தொன்மையானதும், திபெத் நாட்டில் வழிபடக் கூடியது என, தெரியவந்தது. அதேபோல, விநாயகர் சிலை, 300 ஆண்டுகள் பழைமையானது என, தொல்லியல் துறை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
Inputs From: Dinamalar