மீண்டும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு! பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்!

Update: 2022-07-29 13:16 GMT

கோவை: அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக குற்றம்சாட்டி, மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரசின் அனைத்து துறைகளும், ஒழுங்காக இயங்கவில்லை என்று, அனைத்து தரப்பு மக்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல்  "தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது" என்று சமூக ஆர்வலர்கள் ஒரு புறம் கூறி வருகின்றனர்.


இந்நிலையில் கோவையில் நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை குனியமுத்தூர் அருகே சுகுணாபுரத்தில், அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப் பள்ளியில் புதிதாக பனியில் சேர்ந்த 'பிரபாகரன்' என்ற உடற் கல்வி ஆசிரியர், மானவிகள் சிலரிடம் ஆபாசமாக பேசியும் பாலியல் தொந்தரவுகள் அளித்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மானவிகள் தங்களின் பெற்றோர்களிடம் இது குறித்து புகார் அளித்தனர்.


இதனால் பள்ளி வளாகத்திற்கு எதிரே மாணவிகளின் பெற்றோர்கள், அந்த குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கை வைத்து முற்றுகையில் ஈடுப்பட்டனர்.


உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் தலைமை ஆசிரியரிடம் மாணவிகளின் புகார் குறித்து காவல்துறை உதவி ஆணையர் சிலம்பரசன்  விசாரணை நடத்தினார். பெண் ஆய்வாளர் ஒருவர் புகார் அளித்த மாணவிகளிடம் இச்சம்பவம் குறித்து விரிவாக கேட்டறிந்து வருகிறார். இச்சம்பவம் கோவை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 4 நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, அரசு பள்ளி ஆசிரியர் மீது, பாலியல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு அவர் போக்சோ சட்டத்தில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View


Similar News