முனீஸ்வரன் கோயிலில் சாமி சிலைகள் உடைப்பு - சூலாயுதங்களை பிடுங்கி எறிந்து அட்டூழியம்!

Update: 2022-07-31 07:52 GMT

திண்டுக்கல் மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பழமை வாய்ந்த ஆலமர முனீஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சாமி சிலைகள் திடீரென உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு கிடந்தது.

மேலும் கோயிலை சுற்றி இருந்த சூலாயுதங்கள் அனைத்தும் பிடுங்கி எரியப்பட்டிருந்தன. அப்பகுதி முழுவதும் மது பாட்டில்கள் ஏராளமாக கிடந்தன. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து தேன்கனிக்கோட்டை எஸ் ஐ,,க்கள் நீலமேகம், தினேஷ், மற்றும் குற்றத்தடுப்பு போலீசார் கதிர்வேல், ராஜசேகர், சிவா உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக உடைத்தார்கள்? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சாமி சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திக் தலைமையிலான நிர்வாகிகள் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Input From: Dinamalar

Similar News