அச்சிறுப்பாக்கம் மலை குன்றை ஆக்கிரமித்து சர்ச்கள் - உடனடியாக அங்கிருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ்!

Update: 2022-08-09 08:14 GMT

 செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், பள்ளிபேட்டை ஊராட்சியில் மலைக்குன்று மற்றும் புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து, மலை மாதா சர்ச் கட்டப்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மலையில் பிரமாண்டமான கட்டடங்கள் கட்டி, மலைப்பகுதியில் உயிரினங்கள் வசிக்க முடியாத நிலைக்கு, நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரிக்கிறது என, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், அவரது அறிக்கையை தாக்கல் செய்தார்.அந்த அறிக்கையில், மலை மாதா சர்ச் ஆக்கிரமித்துள்ள நிலங்களை, பொதுநல வழக்கு தொடர்ந்த ராஜா என்பவர் முன்னிலையில் அளவீடு செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 28, ஆக., 4ம் தேதிகளில் அளவீடு செய்யப்பட்டதில், 19,820 சதுர அடி நிலம் ஆக்கிரமிப்பு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.ஆக்கிரமிப்பை அகற்றும்படி, சம்பந்தப்பட்ட சர்ச் நிர்வாகத்திற்கு, வருவாய்த் துறையின் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை, விரைவாக எடுத்து வருகிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Input From: Dinamalar

Similar News