ஈ.வெ.ராமசாமி நாயக்கர் சிலைகளுக்கு கீழ் கடவுள் இல்லை என்ற வாசகம் ஏன்? தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி!

Update: 2022-09-14 01:49 GMT

தமிழகத்தில், ஈ.வெ ராமசாமி நாயக்கர் சிலையின் கீழ் எழுதப்பட்டுள்ள, கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்க கோரிய மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் எம். தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுதும் உள்ள ஈ.வெ ராமசாமி நாயக்கர் சிலைகளுக்கு கீழ், கடவுள் இல்லை என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.  இந்த வாசகத்தை நீக்க உத்தரவிட வேண்டும் என, கோரியிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது தமிழக அரசு மற்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கடவுளை நம்பும் மக்கள் மீது வலுக்கட்டாயமாக கடவுள் இல்லை திணிக்க முயல்வதை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

Input From: Dinamalar

Similar News