இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் 28, 29 வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது!

Update: 2022-03-27 11:59 GMT

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 28, 29ம் தேதி ஆட்டோ ஸ்டிரைக்கில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார். இதில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் பங்கேற்காது என்று அதன் மாநிலத் தலைவர் மனோகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் துரோகம் செய்யும் கம்யூனிஸ்ட் கட்சிகள் 28, 29 அன்று ஆட்டோ ஸ்ட்ரைக் அறிவித்துள்ளார்கள். கொரானா காலகட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கும் எந்த விதத்திலும் உதவி செய்யாத கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்கள் அரசியல் காரணங்களுக்காக ஆட்டோ தொழிலாளர்களை, அவர்கள் குடும்பங்களை கஷ்டப்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தம் அறிவித்துள்ளார்கள்.

கம்யூனிஸ்ட் நாடுகள் செய்கின்ற அட்டகாசத்தால் கச்சா எண்ணெய் விலையேறியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளது. ஆகவே இதை கருத்தில் கொண்டு அரசு பெட்ரோல் டீசல், விலை ஏற்றி உள்ளது. இதன் மூலமாக மக்களுக்கும், ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் கஷ்டம் என்றாலும், கொரானா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் 28, 29 அன்று நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News