தருமபுரி: சோகத்தூரில் ஸ்ரீசெல்லியம்மன் ஜல்லிக்கட்டு திருவிழா: சிறப்பு அழைப்பாளராக Dr.SK மிட்டல் கலந்து கொண்டார்!

Update: 2022-04-01 07:16 GMT

தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் ஸ்ரீசெல்லியம்மன் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று (ஏப்ரல் 1) நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளது. இன்று துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஜல்லிக்கட்டு பேரவை கமிட்டி இந்தியா, டாக்டர் எஸ்.கே.மிட்டல் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் தருமபுரி பாமக எம்.எல்.ஏ., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் முதல் காளையை வாடிவாசல் வழியாக அழைத்து வந்தார்.


இந்த ஜல்லிக்கட்டு விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுபிடி வீரர்கள் வருகை புரிந்து விளையாட்டில் கலந்து கொண்டு வருகின்றனர். காளையை பிடிப்பவர்களுக்கு தங்கக்காசுகள் மற்றும் வெள்ளிக்காசுகள், சில்வர் பாத்திரங்கள், பணம் உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து மாலை வரை விளையாட்டு நடைபெறும் என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

காளைகளுக்கு ஏதாவது அடிப்பட்டால் அதற்காக கால்நடை மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர். மாடுபிடி வீரர்களுக்கு எதாவது அசம்பாவிதம் நடந்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளது.

Tags:    

Similar News