பெண்கள் குறித்து ஆபாசமாக பதிவு செய்த சித்தார்த்! தேசிய மகளிர் ஆணையம் அதிரடி!

Update: 2022-01-10 13:36 GMT

நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவிற்காக பதக்கம் வென்ற சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த்தின் பதில் பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் சென்ற வழியில் போராட்டக்காரர்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டனர். இதனால் அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இருந்ததை அனைவரும் மறுக்க முடியாது. இது போன்ற மோசமான சம்பவத்திற்கு பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.



இந்நிலையில், சாய்னா நேவால் தன்னுடைய ட்விட்டர் பதிவில், எந்த நாடு பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் சென்ற வாகனம் முன்பு அராஜகத்தில் ஈடுபட்டது மிகவும் கோழைத்தனமான செயல். இதற்கு வன்மையாக தனது கண்டனத்தை தெரிவிக்கிறேன் என்று பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், சாய்னா நேவாலின் ட்விட்டர் பதிவுக்கு நடிகர் சித்தார்த்தின் பதிவு அனைத்து பெண்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவரது பதிவுக்கு தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது. விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை மிகவும் அவமானப்படுத்தும் விதமாக பதிவு செய்த சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்தியதற்காக 67வது பிரிவின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

Source: Maalaimalar

Image Courtesy:Republic World

Tags:    

Similar News