பா.ஜ.க நிர்வாகி சூர்யா சிவா கார் மீது மோதியது பர்மிட் இல்லாத பஸ்ஸா?

Update: 2022-06-24 10:53 GMT

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளருமான சூர்யாசிவா திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 11 ம் தேதியன்று, உளுந்தூர் பேட்டை அருகே ஒரு தனியார் ஆம்னி பேருந்து சூர்யாவின் கார் மீது மோதி விட்டது. அதனால் சேதமடைந்துள்ள தனது காருக்கு அந்த ஆம்னி பேருந்து உரிய இழப்பீடு தரவேண்டும் என்று சூர்யா கோரிக்கை விடுத்திருக்கிறார். 

அந்த இடத்தில் இழப்பீடு எதுவும் தரப்படாத நிலையில் இதுகுறித்து பிறகு பேசிக் கொள்ளலாம் என்று பேருந்து உரிமையாளர் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ஜ.க பிரமுகர் சூர்யா தனியார் பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக பேருந்தின் உரிமையாளர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கண்டோன்மெண்ட் போலீசார் சூர்யாவை கைது செய்தனர்.

இதனிடையே இந்த கைதுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜோடனை செய்யப்பட்ட பொய்யான வழக்குகளைத் தொடுப்பது திமுக அரசுக்குப் புதிதல்ல, அதேபோல் இந்த அரசில் பொய்யான வழக்குகளை வாங்குவதும் பாஜக தொண்டனுக்குப் புதிதல்ல.

சகோதரர் சூர்யா சிவா அவர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறது பாஜக. பொய்யான வழக்குத் தொடுப்பதில் யார் சிறந்தவர் என்று திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் செல்வி மம்தா ஆகிய இருவருக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்! என்று பதிவிட்டுள்ளார்.

அதற்கு ஏற்பவே சில உண்மைகள் வெளியாகி உள்ளன. விபத்து ஏற்படுத்திய பர்மிட் இல்லா ஆம்னி பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதியப்படாமல் பேருந்து உரிமையாளரின் புகாரை வைத்து சூர்யா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Similar News