அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி மையம் - துவக்கி வைத்த அண்ணாமலை!
நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பாஜக நகரத்தலைவர் கே பி சரவணன் பொன்னுசாமி அவர்களால் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார் பள்ளி இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் பயிற்சி மையத்தின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சி குறித்த கையேடுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாணவர்களுக்கு வழங்கினார்.
ஒழுக்கம், மன உறுதி, கடின உழைப்பு, விடா முயற்சியோடு படித்தால் மாணவ, மாணவிகள் நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும் என அண்ணாமலை கூறினார்.