ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்படும்: சென்னை மாநகராட்சியின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!

Update: 2022-04-13 06:25 GMT

சென்னையில் இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்பட்டு வரும் என்று சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக வெளிவந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக அரசு தமிழகம் முழுவதும் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது. இதனால் நகர்ப்புறம், பேரூராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சொத்துவரி பல மடங்கு உயர்ந்தது. இதனை கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் இனி வரும் ஆண்டில் சொத்து வரி உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏற்கனவே உயர்த்தப்பட்ட 150 சதவீத சொத்துவரியை குறைக்கக்கோரி பலதரப்பு மக்களும் திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் சொத்துவரி உயர்த்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டிருப்பது அனைவரையும் மேலும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The New Indian Express

Tags:    

Similar News