சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.!
சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு: இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கட்டண குறைப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சென்னையில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் கட்டணம் அதிகமாக உள்ளதாக அரசுக்கு பயணிகள் கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற முதலமைச்சர் ரயில் கட்டணத்தை அதிரடியாக குறைத்து உத்தரவிட்டார். இந்நிலையில், டோக்கன் முறையில் வாங்கப்படும் டிக்கெட்டுகளுக்கு அதிகபட்சமாக இருந்த ரூ.70 கட்டணம் ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பயண அட்டை மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 10 சதவீதமும், கியூ.ஆர். குறியீடு மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு 20 சதவீதமும் தள்ளுபடி வழங்கப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.