காவல்துறை குடும்பங்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய முதலமைச்சர்.!
காவல்துறை குடும்பங்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய முதலமைச்சர்.!
தைத்திருநாளையொட்டி இன்று பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருநாளில் அரசியல் தலைவர்கள் தங்களது மகிழ்ச்சியான பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.
அது போன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறையினரின் குடும்பங்களுடன் தனது பொங்கல் திருநாளை கொண்டாடினார்.
அப்போது காவலர்களின் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து தனது பொங்கல் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். அப்போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை மாநகர கமிஷ்னர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர் குறிப்பிடத்தக்கது.