கரூர் மாவட்டத்தில் புதிய திடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்.!
கரூர் மாவட்டத்தில் புதிய திடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்.!
கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 118 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 627 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், 118 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, 627 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும், 35 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய முதலமைச்சர், தொடர்ந்து மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி, மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.