எல்லாம் தான் பார்த்துக்கொள்வதாக சீட்டிங் - கம்பி எண்ணப்போகும் கிறிஸ்தவ பெண் மத போதகர்!

Update: 2022-05-21 11:40 GMT

திருநெல்வேலியை சேர்ந்த காட்ப்ரே நோபுள் என்ற பேராயர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

அதில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மரியாசிஸ்டர் என்பவர் என்னை தொடர்புகொண்டு நானும் மத போதகர். உங்கள் மூத்த மகனுக்கு, கிரீஸ் நாட்டில் வேலை வாங்கி தருகிறேன் என கூறினார்.

இதைத் தொடர்ந்து  ரூ.8.50 லட்சம் வாங்கினார். 'பணம் கொடுத்த பிறகும் விசா வரவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மரியாசிஸ்டர் எங்களிடம் வழங்கிய பணியாணை போலி என தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்டபோது, கொலை மிரட்டல் விடுக்கிறார் எனக்கூறினார். 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரியா சிஸ்டர் உண்மையான பெயர் மரியா செல்வம் என்பது தெரிய வந்தது.

இலங்கையைச் சேர்ந்த அவர், மத போதகராக செயல்பட்டு, தேவாலயங்களுக்கு வருவோருக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக மோசடிசெய்வதையே தொழிலாக செய்துவந்ததும் தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே அவரிடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் ரூ.18.5 லட்சம் இழந்து, ஆட்சியர் அலுவலகத்தில் 2019-ம் ஆண்டு தீக்குளித்து இறந்ததாகவும் கூறப்படுகிறது. 

Inputs from: Hindutamil

Similar News