மூடப்பட்ட மெரினா, குவிக்கப்பட்ட போலீசார் - அடுத்த மெரினா போராட்டமா?

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2022-07-19 11:24 GMT

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியம்புத்தூரில் ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தவர் 17 வயது மாணவி இவர் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக சமூக வலைத்தளங்களில் மனைவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கூறி பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில் கணியம்புத்தூரில் பகுதியில் கலவரம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் பள்ளி அடித்து உடைக்கப்பட்டது, வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன இதன் காரணமாக அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளிக்கிறது வருகிறது, அதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் சென்னை மெரினா கடற்கரையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். கலங்கரை விளக்க முதல் தலைமைச் செயலகம் வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மெரினாவில் இளைஞர்கள் கூடி போராட்டம் நடத்த வாய்ப்பு இருக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source - One India Tamil

Similar News