மத்திய அரசு அனுமதி கொடுக்குமா? - எதிர்பார்ப்பில் மா.சுப்பிரமணியன்

Update: 2022-04-19 08:55 GMT

தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் தற்போது 7 வகை வைரஸ்கள் உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21 நாட்களாக உயிரிழப்பு இல்லை என தெரிவித்தார். தமிழகத்தில் 92.38 சதவீதம் முதல் தவணை தடுப்பூசியும், 77.28 சதவீதம் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

இதனால் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது எனக்கூறிய அவர் தமிழ்நாட்டை பொருத்தவரை மரபணு மாற்றம் செய்யும் ஆய்வுக்கூடத்தை நாட்டிலேயே தமிழக அரசு தான் சொந்தமாக வைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பிற நாடுகள் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் முகக்கவசம் போட விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு மக்கள் தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட மத்திய அரசு அறிவித்துள்ளதாகவும், முன்கள பணியாளர்கள் நீங்களாக பிறருக்கும் தடுப்பூசி பூஸ்டர்களை இலவசமாக செலுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

Similar News