தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் தொடர் ரைடு - எங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் சுமார் 20 அரசு ஒப்பந்தக்காரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-20 13:05 GMT

தமிழ்நாட்டில் சுமார் 20 அரசு ஒப்பந்தக்காரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அண்மையில் இரண்டு அரசு ஒப்பந்தக்காரர்களின் இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர், அதாவது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஒப்பந்தக்காரரான அய்யாதுரை என்பவர் தனது எஸ்.பி.கே நிறுவனம் பெருமளவில் வரியைப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது.

அதேபோல் இன்னொரு அரசு ஒப்பந்தக்காரருமான சந்திரசேகருக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அப்பொழுது சில முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலைகள் தற்பொழுது தமிழ்நாட்டில் சுமார் 20 அரசு ஒப்பந்தக்காரர்கள் தொடர்புடைய வீடுகள் அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பான புகாரில் மதுரை திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மதுரைகள் அன்னை பாரத் சிட்டி கிரீன் சிட்டி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


Source - Junior Vikatan

Similar News