38 மாவட்டங்களில் தொடங்கிய கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. அரசு மருத்துவமனையில் மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு.!
38 மாவட்டங்களில் தொடங்கிய கொரோனா தடுப்பூசி ஒத்திகை.. அரசு மருத்துவமனையில் மத்திய அமைச்சர் நேரில் ஆய்வு.!
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக ஒத்திகை 2ம் கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடக்கும் ஒத்திகை நிகழ்ச்சியை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னர் 5 மாவட்டங்களில் மட்டும் ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படலாம் என மருத்துவ வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.