கவுன்சிலர் அலுவலகமா? தி.மு.க கட்சி அலுவலகமா? அடையாளமே தெரியாமல் மாற்றி அட்டகாசம்!

Update: 2022-05-11 01:54 GMT

சென்னை மாநகராட்சி 171-வது வார்டு கவுன்சிலர் கீதா முரளி. அவரது அலுவலகம் பசுமை வழிச்சாலை தொடக்கத்தில் அமைந்துள்ளது. மே ௪ ஆம் தேதி அங்கு தி.மு.க சார்பில் தண்ணீர் பந்தல் திறந்தனர்.

அதற்காக, கவுன்சிலர் அலுவலகம் என்றிருக்கும் பெயர்ப் பலகைக்கு மேலே முதல்வர் ஸ்டாலின், உதயநிதி, மயிலாப்பூர் எம்.எல்.ஏ வேலு, கவுன்சிலர் கீதா முரளி, அவரின் கணவரும் மயிலாப்பூர் கிழக்குப் பகுதிப் பொறுப்பாளருமான முரளி ஆகியோரின் படத்துடன் கூடிய பேனர் மாட்டப்பட்டுள்ளது. வாயிலின் இருபக்கங்களிலும், உதயநிதி பேனருக்கு நிகராக, மயிலை வேலு படமும் மாட்டப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட கட்சி அலுவலகமாக மாறிவிட்டது கவுன்சிலர் அலுவலகம். அருகில் பால்வாடி அமைந்துள்ளது. அதன் பெயர்ப் பலகையை அகற்றி, உள்ளே மாட்டிவிட்டனர். அதுபோக, குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் முகாமும் அங்கு நடைபெறுகிறது.

மே 4, 5 ஆகிய தேதிகளில், அவர்களுடைய நிகழ்ச்சிக்காக தடுப்பூசி முகாமையே நிறுத்திவிட்டனர். மே 4-ம் தேதி காலையிலிருந்தே தி.மு.க-வினர் அப்பகுதியில் குவியத்தொடங்கிவிட்டார்கள். அதனால் அப்பகுதியில் நடைபெற வேண்டிய பல அரசு நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்பட்டது. 

Inputs From: Vikadan

Similar News