தலித் கிறிஸ்துவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை - ஆயர் நியமனத்தில் ஏமாற்றப்படும் சோகம்!
தலித் கிறிஸ்தவர்கள் இயக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் 18 மறை மாவட்டத்தை சேர்ந்த மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த மாநில தலைவர் டாக்டர் மேரிஜான், தலித் கிறிஸ்தவர்கள் பிரச்சனை தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக திருச்சபையில் இந்த இயக்கம் சமத்துவம் சம உரிமை பெற போராடிக் கொண்டிருக்கிறது.
திருச்சபை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த தீர்வுவும் காணப்படவில்லை. இந்திய ஆயர் பேரவை, இந்திய கத்தோலிக்க பேரவையும் அறிவித்த கொள்கைப்படி தலித் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், உயர்பதவிகளில், ஆயர் பதவிகளில் 64இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர்.
தலித் கிறிஸ்தவர்கள் யாரையும் நியமிக்கவில்லை. அதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். கும்பகோணம், தஞ்சாவூரில் காலியாக உள்ள ஆயர் பதவிக்கு தலித் ஆயிரை நியமனம் செய்யவேண்டும் என கூறினார்.
Input From: Samayam