பக்தர்கள் கூட்டத்தால் ராமேஸ்வரம் கோயிலில் முருகன் சிலை சேதமானதாம் - அறநிலையத்துறை அடுக்கும் காரணம்!

Update: 2022-05-05 02:44 GMT

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பழமையான முருகன் சேதமடைந்துள்ளதால், தரிசிக்க வரும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கடந்த 11ஆம்  நுாற்றாண்டில் உருவானது. பரிகாரம், தோஷம் கழிக்க, வழிபாடு செய்ய என தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடி தரிசிக்கின்றனர்.

சாமி சன்னதி அருகில் பீடத்துடன் 3 அடி உயரத்தில் வீற்றிருக்கும் பழமையான முருகன், வள்ளி, தெய்வானை சிலைகள் உள்ளது.

கருங்கல்லில் அமைந்துள்ள இந்த சிலையில் முருகனின் வலது கை, கடந்த 3 நாட்களுக்கு முன் உடைந்து விழுந்தது. பழமையான முருகன் சிலையின் கை உடைந்த சம்பவம் கோவிலுக்கும் பரபரப்பை உண்டாக்கியது.

சிலை உடைந்த நாள் அன்று தரிசிக்க பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சன்னதிக்கு முன் திரண்டனர். அப்போது ஏற்பட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் சிலை மீது விழுந்து உடைந்து இருக்ககூடும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

உடைந்த சிலையை அகற்றிவிட்டு, புதிய சிலையை பிரதிஷ்டை செய்ய ஹிந்து அறநிலையதுறை ஆணையருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Inputs From: Dinamalar

Similar News