பிரதமர் மோடி வருகை எதிரொலி.. முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்.!

பிரதமர் மோடி வருகை எதிரொலி.. முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்.!

Update: 2021-02-14 10:58 GMT

பிரதமர் நரேந்திர மோடி இன்று பல்வேறு வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருகை தருகிறார். அவரது வருகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இன்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் பிரதமர், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்த அரங்கில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் அரங்கத்திற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பாஜக நிர்வாகிகள் பலர் வருகை புரிவார்கள்.

இதனால் அந்த சாலையில் முக்கிய விஜபிக்கள் வருகை புரிவார்கள். இதனால் சாலைகளில் இன்று காலை முதல் மதியம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வருவதற்கு அனுமதி இல்லை. அதே நேரத்தில் மாநகர பேருந்துகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Similar News