தமிழகத்தில் அதிகரிக்கும் போலி டாக்டர் பட்டங்கள்: தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் அதிகரித்து வரும் போலி டாக்டர் பட்டங்கள் தொடர்பாக முக்கிய முடிவை உயர் கல்வித் துறை எடுத்து இருக்கிறது.
சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுக்கு இடையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கி நடத்தினார். பின்னர் அவர் பத்திரிக்கைக்கு பேட்டியின் போது கூறுகையில், ஒவ்வொரு பல்கலைக்கழகங்களில் தற்போது ஊதியம் நிர்வாகம் போன்ற வெவ்வேறுமுறைகள் பின்பற்றப்படுவது மாற்றியமைக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நியமனம் தேர்வு கட்டணம் ஒரே மாதிரியாக செயல்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பதிவாளர்கள், ஆசிரியர் பணியாளர்கள் என அனைவருக்கும் அனைத்து பிரிவினருக்கும் மதுரை மாதிரியான ஊதியம் அளிப்பது பற்றியும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தீர்வு கட்டணத்தை நிர்ணயிப்பது பற்றியும் இந்த குழு முடிவு செய்து இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் போலிப்பட்டங்கள் வழங்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
எந்த பல்கலைக்கழகங்களிலும் தனியார் அளவிலோ அல்லது பல்கலைக்கழக அளவிலோ கூட்டங்கள் நடத்தப்பட்டால் அது உயர்கல்வி தொழில் செயலாளரின் அனுமதியின் பெயரில் தான் நடத்த வேண்டும். அந்த கூட்டத்திற்கு யாரை அழைக்க வேண்டும் என்றாலும் அவருடைய ஒப்புதல் பெயரில் தான் நடைபெற வேண்டும் என்று கூறி இருக்கிறது. எனவே இதன் மூலம் போலி பட்டங்கள் கொடுக்கப்படுவது தவிர்க்கப்படும் என்று நம்பிக்கை தரும் வகையில் அவர் கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar