நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

நாளை வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

Update: 2021-01-19 17:00 GMT

கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதியில் இருந்து இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது அந்த பணிகள் முடிவு பெற்றுள்ளது. இதனால் நாளை இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, திருத்தம் செய்வது, முகவரி மாற்றுவது போன்ற பணிகளுக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இதுவரை புதியதாக பெயர் சேர்ப்பதற்காக 20.99 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. அதே போன்று பெயர் நீக்குவதற்கு 4.43 லட்சம் விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தது. முகவரி மாற்றம் செய்வதற்கு 1.88 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை காலை புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News