தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு குறைவா.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி.!

Update: 2021-01-09 11:37 GMT

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்துள்ளது. கொரோனா தொற்று காலகட்டத்தில் சர்வதேச பங்குச்சந்தைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே போன்று பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், உள்ளிட்ட தொழிலில் முதலீடு செய்து வந்த முதலீட்டாளர்கள் தற்போது தங்கத்தில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

அதனால் தங்கத்தின் தேவை அதிகரித்திருந்ததால், தங்கம் விலை எதிர்பாரத அளவுக்கு ஏற்றத்தைக் கண்டுள்ளது. தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து இயல்புநிலைக்கு மாறினாலும் தொழில்துறையில் தற்போது வரைக்கும் கொரோனா பீதி நிலவி வருகிறது. இது தங்கம் விலையில் ஏற்ற இறக்கத்தில் எதிரொலிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.54 குறைந்து ரூ.4,700க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.37,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை குறைப்பால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நகை கடைகளில் கூட்டம் அதிகமாகவே காணப்படுகிறது.

Similar News