தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் அதிகரித்திருப்பதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் முதலே தங்கத்தின் விலை ஏறுமுகமும் மற்றம் இறங்குமுகமாகவே காணப்படுகிறது. இதற்கு காரணம் பலர் தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் மதிப்பு எப்போதும் வீழ்ச்சியடையாத காரணத்தினால் தொழில்துறையினர் இந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.37,240க்கு விற்பனையாகிறது.
அதே போன்று கிராம் தங்கம் ரூ.17 உயர்ந்து ரூ.4,655 க்கு விற்பனையாகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளியின் ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை ஏற்றத்தால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது முகூர்த்த நேரம் என்பதால் பெண் வீட்டார்கள் ஆபரணத்தங்கம் வாங்குவார்கள். இந்த விலை உயர்வு அவர்களை வெகுவாகவே பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.