பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும்: நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் தி.மு.க. அரசால் உருவாக்க முடியாது!

Update: 2022-03-19 09:35 GMT

அனைத்து வகையிலான நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் மீண்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்களை போன்று உருவாக்க முடியாது. எனவே அதனை கருத்தில் கொண்டு பழமையான கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தவை மீறுகின்ற வகையில் சுசீந்திரம் தாணுமாலய கோயிலில் ஓவியங்கள் வெள்ளை அடித்து அழிக்கப்படுகிறது. அதே போன்று மிகவும் பழமை வாய்ந்த நாமக்கல் சோளீஸ்வரர் கோயிலில் பழங்கால கற்கள் உடைக்கப்படுகிறது என்று ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பீ.டி.ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. அப்போது அறநிலையத்துறை சார்பில் விசாரணை நடைபெறுகிறது. கோயிலை இடித்த சம்பவத்தில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், எவ்வளவு நவீன முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கோயில்களை போன்று மிகவும் கலை நயத்துடன் கட்டுமானத்தை ஆகம விதிப்பதி கட்ட முடியாது என்று திமுக அரசு நீதிமன்றம் அறிவுரை கூறியது. எனவே பழமை வாய்ந்த கோயிலை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.

Source: News 18 Tamilnadu

Image Courtesy: The Hindu

Tags:    

Similar News